News August 14, 2024
மயிலாடுதுறையில் இளைஞர் பரிதாப பலி

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியில் பாலம் கட்டுமானத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த மணிகண்டன் தலையில் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்டுமானப் பணி பாதுகாப்பு தடுப்புகள் இன்றி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 22, 2026
மயிலாடுதுறை: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 22, 2026
மயிலாடுதுறை: பெண் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பாண்டிச்சேரி மதுபானம் விற்பனை செய்த ராஜகுமாரி (60) என்பவரை போலீசார் கடந்த 1-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
News February 22, 2026
மயிலாடுதுறை: ஓடும் பேருந்தில் வெளிவந்த சக்கரம்

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சீர்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பேரிங் உடைந்து வலது பின்புறம் உள்ள 2 சக்கரங்கள் வெளிவந்தது. அதனால் பலத்த சத்தம் எழுந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். ஓட்டுநர் லாவகமாக பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


