News November 23, 2024
மயிலாடுதுறைக்கு நாளை துணை முதல்வர் வருகை

மயிலாடுதுறையில் உள்ள தனியார் அரங்கில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மாலை நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது தாயார் துர்கா ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ. வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News July 5, 2025
ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். துவரை தட்டை பயறு வகை விதைகள் 1500 பேருக்கும் தக்காளி, கத்திரி, உள்ளிட்ட காய் விதை தொகுப்பு 20 ஆயிரம் பேருக்கும் பப்பாளி, கொய்யா, போன்ற பழ செடிகள் 11,750 பேருக்கும் 100% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கு tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

மயிலை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இந்த <
News July 5, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது – ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு பழங்குடியினா் நல அலுவலகத்திற்கு ஜூலை 10-ஆம் தேதிக்குள் நேரில் வர வேண்டும் மயிலாடுதுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.