News April 7, 2025
மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (36). குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: இவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்!

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம். கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் 21-வது தவணை தொகையான 2,000 ரூபாயை விவசாயிகள் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.
News November 17, 2025
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 17, 2025
செஞ்சியில் மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வருகின்ற நாள். 23/11/2025. ஞாயிற்றுக்கிழமை
மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் இடம்: செஞ்சி திருவண்ணாமலை சாலை, செல்வி தியேட்டர் பக்கத்தில் சிட்டி யூனியன் பேங்க் அருகில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். முகாமில் செஞ்சி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இன்று (16) செஞ்சி அரிமா சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.


