News April 29, 2025

மன்னார்குடி பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்

image

மன்னார்குடியை சேர்ந்த லெனின் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் பதிவிட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று விடுதலை செய்யப்பட்ட அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Similar News

News November 7, 2025

திருவாரூர்: யூபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எஸ்.சி மற்றும் ஒபிசி மாணவர்களுக்கு மாதம் ரூ.4500 கல்வி உதவித் தொகையுடன் கூடிய, இலவச மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான (UPSC) பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (25.11.2025) இறுதி நாளாகும். மொத்தமுள்ள 100 இடங்களில் 70 இடங்கள் எஸ்சிக்கு, 30 இடங்கள் ஒபிசி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

திருவாரூர்: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

image

திருவாரூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 7, 2025

திருவாரூர்: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

திருவாரூர் மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!