News April 26, 2025
மன்னார்குடி: கடன் பிரச்சினை தீர சிறப்பு வழிபாடு

மன்னார்குடி ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ரணவிமோட்சகருக்கு நாளை (ஏப்.27) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேல் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. நீண்ட நாள் கடன் சுமை மற்றும் தீராத நோய்கள் உடையோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதை இப்போதே SHARE செய்யவும்..
Similar News
News April 27, 2025
நோய் ஏற்படாமல் காக்கும் பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE!
News April 27, 2025
திருவாரூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
News April 27, 2025
திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து துறையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க நளையே (ஏப்.28) கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு <