News August 25, 2024
மன்னார்குடி எம்.எல்.ஏ அமெரிக்காவில் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள ‘சிக்காகோ – அமெரிக்க தமிழர்களுடனான சந்திப்பு’ நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்சரும், மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமான TRB ராஜா தலைமையில் சிக்காகோவில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Similar News
News November 19, 2025
திருவாரூரில் போலி உரம் விற்பனை கண்டுபிடிப்பு

திருவாரூர் அடுத்த கோமள பேடடையில் தனியார் விற்பனை கூடத்தல் மற்றும் கடையில் உரங்கள் விற்பனை செய்யும் பொழுது, வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலியான உரங்கள் 8.850.மெட்ரிக் டன் உரங்கள் கண்டிப்பிடிக்கப்பட்டதை அடுத்து கடைக்கு சீல்வைத்தனார். உரிமையாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
News November 18, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று வாக்காளர் சிறப்பு திருத்த முகாமினை நேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற காலங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விரைந்து பணியினை முடிக்கவும் அலுவலக ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.
News November 18, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி!

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் உள்ள பாரத் கலைக்கல்லூரியில் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், தேசிய செயல்திட்டம் போதைப்பொருள் ஒழிப்பு கீழ் நாசா முக்த் பாரத் அபியான் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


