News August 25, 2024
மன்னார்குடியில் ஆணழகன் போட்டி

திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் அசோசியேசன் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அர்பன் பேங்க் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட வலுத்தூக்கம் சங்கம் இணைந்து நடத்துகிறது. இதில் இளைஞர்கள் தங்களது உடற்கட்டு திறனை வெளிப்படுத்தி ஆணழகன் போட்டியில் போட்டியிடுகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருவாரூர்: புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா

நீடாமங்கலம் அருகில் உள்ள பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று மாலை (நவ. 25) நடைபெற்றது. காமதேனு சாரீட்டீஸ் மூலம் வகுப்பறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வர்ணப் பூச்சு அடிக்கப்பட்டு புதுப்பிக்க பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தலைமை வகித்தார்
News November 26, 2025
திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
திருவாரூர்: மூழ்கிய பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பயிரிடப்பட்ட வயல்களில் மழை நீர் புகுந்து முழுவதுமாக மூழ்கி காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, மாங்குடி பகுதிகளில் மழை நீரில் மூழ்கிய பயிர்களை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நேற்று (நவ 25) பார்வையிட்டார்.


