News January 24, 2025
மன்னார்குடிக்கு வருகை தரும் பிரேமலதா விஜயகாந்த்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாளை (ஜன.25) தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மன்னார்குடிக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் பணியில் திருவாரூர் மாவட்ட தேமுதிகவினர் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 22, 2025
திருவாரூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 22, 2025
திருவாரூரில் அதிகபட்சம் 21.80 மி.மீ மழை பதிவு

திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது இந்த நிலையில் குடவாசலில் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 21.80 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.


