News April 15, 2024
மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
தேனி: வகுப்பறைக்குள் சிறுவனை வைத்து பூட்டிச் சென்ற சம்பவம்

கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் அரசு கள்ளா் ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இங்கு நேற்று (நவ.24) மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில் பள்ளிக்குள் மாணவர் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சென்று வகுப்பறையைத் திறந்து பாா்த்த போது 4ம் வகுப்பு மாணவா் சாமு வகுப்பறையில் தூங்கி விட்ட நிலையில் வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.
News November 25, 2025
தேனியில் 100 -ஐ தொட்ட தக்காளி விலை

பெரியகுளம் சந்தையில் தினமும் 5 டன்னிற்கும் அதிகமாக தக்காளி விற்பனையாகும். தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 2 தினங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 70 என விலை உயர்ந்தது. தற்போது பெங்களூருவிலிருந்து ‘சாகோ’ என்ற ரகம் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு அவை கிலோ 100 என விற்பனை செய்யப்படுகிறது.
News November 25, 2025
தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <


