News April 25, 2024
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்த வரபிரசாதம் (60) என்பவர் அவரது மனைவி விசுவாசம் (50) நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்தார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வரபிரசாதம் மீதான குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News November 20, 2024
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி மதுராந்தகத்திலும், 22ஆம் தேதி செங்கல்பட்டிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
செங்கல்பட்டில் நாளை மின்தடை அறிவிப்பு
செங்கல்பட்டு மற்றும் நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.21) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் 4 மணி வரை கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங் போர்டு, நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
சிட்கோ தொழிற்பேட்டையில் ஊழியர்கள் போராட்டம்
ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு பலமுறை நிர்வாகத் திட்டம் கோரிக்கை வைத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால், நேற்று காலை முதல் 40க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.