News April 24, 2025
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது!

திண்டுக்கல்: மைலாப்பூரைச் சேர்ந்தவர் வில்லியம்சார்லஸ் (41). இவருக்கும் இவரது மனைவி வேளாங்கண்ணி லீமா ரோஸ் (39) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வில்லியம்சார்லஸ், மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் வில்லியம்சார்லஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 15, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சனிக்கிழமை இன்று (நவம்பர் 15) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

அம்மையநாயக்கனூரில் 2007ஆம் ஆண்டு நடந்த பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த அழகுமலை (54) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் பிணையில் வெளிவந்த அவர், 18 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் அழகுமலையை கைது செய்து, நீதிமன்றக் காவலில் ஒப்படைத்தனர்.
News November 15, 2025
திண்டுக்கல்: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ATM-ல் பணம் எடுக்க செல்லும்போது, முன்பின் தெரியாத அந்நிய நபர்களிடம் உங்கள் ATM கார்டை கொடுத்து உதவி பெறுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறியாத நபர்கள் ஏமாற்றி பணத்தை திருடும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் எச்சரித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


