News April 27, 2025

மனைவியின் கள்ளக்காதலரை கண்டித்த கணவர் கொலை

image

சுரண்டை பகுதியை சேர்ந்தவர் தாமஸ் 26. கட்டட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. 2 வயதில் மகன் உள்ளார். முக்கூடல் சிங்கம் பாறையைச் சேர்ந்த அந்தோணி ஜெனித் 36, என்பவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி தாமஸ் வீட்டுக்கு சென்றபோது, நந்தினியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை தாமஸ் கண்டித்தார். இந்நிலையில் நேற்று காலை தாமஸ் வீட்டிற்கு வந்து தகராறு செய்த அந்தோணி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார்.

Similar News

News April 28, 2025

தென்காசி: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

image

தென்காசி மக்களே மதுரை ரயில்வே கோட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியம் ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை இந்த <>லிங்க <<>>மூலம் ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 28, 2025

டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

image

சிவகிரி சேனைத்தலைவா் மண்டபம் அருகே பெண் ஒருவா் அவரது 9 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த சிறுமி, நடந்து சென்ற சிறுமியின் மீது மோதியதில் அவா் காயமடைந்தாா். டூவீலரில் வந்து விபத்தை ஏற்படுத்தியது சிவகிரி வடக்கு தெருவை சோ்ந்த குருசாமியின் 15 வயது மகள் என தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை டூவீலர் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை கைது செய்யப்பட்டாா்.

News April 27, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்.27 இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!