News April 15, 2024
மனிதநேய கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம்

திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி வை. செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர், அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் நியாசுதீன் தலைமையில் இருசக்கர வாகண பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் மமக அமைப்பு செயலாளர் ஹலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News September 18, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 18, 2025
திருவாரூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருவாரூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 18, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் கடைகள் தொண்டு நிறுவனங்கள் என அனைத்திலும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் உடனடியாக உள்ளகக் குழு அமைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை உடன் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.