News September 12, 2024
மனப்பாச்சி கிராமத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் ஆராம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பாச்சி கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறி அவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்த அவர் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இன்று மனப்பாச்சி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
Similar News
News December 6, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
கள்ளக்குறிச்சி: இழந்த செல்வதை மீட்டு தரும் பெருமாள்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் தாலுக்காவிலுள்ள திருவரங்கத்தில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் கோயில். இந்த கோயில் 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் ரங்கநாத சாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும், இங்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால் திருமணம் வரம், குழந்தை வரம் மற்றும் இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம். SHARE NOW
News December 6, 2025
கள்ளக்குறிச்சி பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!


