News October 8, 2024

மத நல்லிணக்கத்தின் அடையாளம் நாகூர் தர்கா

image

நாகூரில் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர் தர்கா என்பது சூஃபி துறவி சையது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது கல்லறையின் மீது கட்டப்பட்ட தர்கா ஆகும். ஷாகுல் ஹமீத் நாகூரில் பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. இதனால் 16-ஆம் நூற்றாண்டில் இந்து மக்கள் மற்றும் மன்னர்களின் பெரும் பங்களிப்புடன் நாகூரில் தர்கா கட்டப்பட்டது. இது அப்பகுதியில் இரு மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வின் அடையாளமாக விளங்குகிறது. SHARE NOW

Similar News

News November 20, 2024

நாகை:  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு 

image

நாகையில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி அறிவித்துள்ளார். ஆட்சியரின் அறிவுரையை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News November 20, 2024

திருமருகலில் பாம்பு கடித்து முதியவர் பலி

image

திருமருகலை சேர்ந்தவர் உத்திராபதி (80). இவர் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கையில் பாம்பு கடித்துள்ளது. இதில் உத்திராபதி வலியில் கத்தியுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 20, 2024

நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

நாகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலைவாய்ப்பற்ற ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ்  கேட்டு கொண்டுள்ளார். SHARE IT