News August 3, 2024
மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன்?

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் இன்று பேசிய அவர், ஆளுநருக்கு மீண்டும் பதவி வழங்குவது மத்திய அரசின் நிலைபாடு என்றார். பிரதமர் அரசியலமைப்பு படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறார். ஆனால், வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Similar News
News January 4, 2026
சென்னையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News January 4, 2026
சென்னை: ரயில்வேயில் 2,200 பணியிடங்கள் அறிவிப்பு- APPLY

சென்னை மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த லிங்க்கை <
News January 4, 2026
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதல்வர்

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜன.5) சென்னையில் தொடங்கி வைக்கிறார். ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல், ஏசர், ஹெச்பி போன்ற மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.


