News October 23, 2024
மத்திய போக்குவரத்து துறை அமைச்சருடன் தஞ்சை எம்.பி சந்திப்பு

டெல்லியில் இன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரியை நேரில் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்திடவும் கோரிக்கை மனுவை அளித்தார்.
Similar News
News November 24, 2025
தஞ்சை: கணவர் தூக்கிட்டு தற்கொலை

பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (36), மனைவி ராதிகா (35), இவர்களுக்கு ஹரிஷ் என்ற 7 வயது மகன் உள்ளார். இந்நிலையில் மனைவி கடந்த மூன்று வருடங்களாக தாய் வீட்டில் வசித்து வருவதால் மன அழுத்தத்தில் முருகையா ஆற்றுப்பாலம் அருகே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
தஞ்சை: டிகிரி போதும்.. அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 24, 2025
தஞ்சை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


