News February 16, 2025
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் .<
Similar News
News January 3, 2026
கள்ளக்குறிச்சி: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

கள்ளக்குறிச்சி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
கள்ளக்குறிச்சி: குடிகார கணவன் மனைவியிடம் அட்டூழியம்!

கள்ளக்குறிச்சி: ஆதனூரைச் சேர்ந்த சுமிலாவும், சரவணப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டனும், கணவன் மனைவி. ஆனால், 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு சுமிலா உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அங்கு சென்ற மணிகண்டன், சுமிலாவை அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 3, 2026
கள்ளக்குறிச்சி: கொண்டாட வந்தவர் துடிதுடித்து பலி!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா், கொழுந்திராம்பட்டைச் சோ்ந்தவா் சி.பவுல்ராஜ் (31). இவா் சென்னையில் எலெக்ட்ரிஷியன் தொழில் செய்துவந்தாா். புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் பைக்கில் சொறையம்பட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


