News February 16, 2025
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கிளிக் செய்யவும். மார்ச்4 கடைசி தேதி.
Similar News
News December 6, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம் கிழக்கு, இடுவாய் கிழக்கு, வஞ்சிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 6, 2025
இரவு ரோந்து போலீசார் பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (5.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, குடிமங்கலம், செய்யூர், ஊதியூர், வெள்ளகோவில் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 5, 2025
திருப்பூரில் ஆச்சர்யம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பூரில் உள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்ற வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


