News August 14, 2024
மத்திய அரசு ரூ.5,000, தமிழக அரசு ரூ.5,000 அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படும் போது விபத்தில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி செய்யும் நபர்களுக்கு Good Samaritan Scheme திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.5,000 ஊக்கத்தொகையும், தமிழக அரசு ரூ.5,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 22, 2025
கிருஷ்ணகிரி: மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து!

போச்சம்பள்ளி மடத்தானூரில் இருந்து நேற்று (நவ.21) இரவு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வடமலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மின்சார கம்பத்தின் மீது மோதி, மின் ஒயர் அறுந்தது. மின் ஒயர் அறுந்து விழுந்த நிலையில், லாரிக்கு பின்னால் டூவீலரில் தனது கணவருடன் சென்ற விஜி என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: ஜன-15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


