News September 13, 2024
மத்திய அமைச்சர் கும்பகோணம் வருகை

மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம்-விக்கிரவாண்டி நெடுஞ்சாலை ஆய்வு பணிகளுக்காக இன்று காலை 10.35 மணியளவில் கும்பகோணத்துக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வரவேற்றார். இந்நிகழ்வில் எம்.பி-க்கள் சுதா, கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 22, 2026
தேர்தல் பணி; முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு!

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பி வெளியிட்டுள்ளார். அதல், வருகிற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையோடு இணைந்து செயல்பட, முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு முன்னாள் படைவீரர்கள், தங்களது அடையாள அட்டை, மு.படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ exweltnj@tn.gov.in என்ற முகவரியிலோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 22, 2026
தஞ்சாவூர்: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தஞ்சாவூர் மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT!
News February 22, 2026
தஞ்சாவூர்: அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி – சோகம்

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ்(24) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன்(24) ஆகிய இருவரும் பைக்கில் திருச்செந்தூர் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அம்மணிசத்திரம் அருகே வந்த போது பைக் மீது அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


