News November 28, 2024

மத்திய அமைச்சருடன் தமிழக அமைச்சர் சந்திப்பு

image

சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் இன்று (நவ.28) டெல்லியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து, சுற்றுலாத்துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News

News December 8, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கௌரவிக்கும் விதமாக, தமிழக அரசு ஆண்டுதோறும் சமூக நீதி பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான விருது பெற தகுதி உடையவர்கள், தங்களது முழு விவரங்களை பூர்த்தி செய்து வருகின்ற 18ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

சேலம்: அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

image

சேலம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஒன்றான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

News December 8, 2025

BREAKING: சேலம் அடிக்கல் நாட்டினார் CM ஸ்டாலின்!

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் சங்ககிரி வட்டம் வடுகப்பட்டி கிராமம் மற்றும் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கு காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். இதனைத்தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

error: Content is protected !!