News August 3, 2024
மத்திய அமைச்சரிடம் மனு அளித்த கடலூர் எம்.பி.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத், இன்று (ஆகஸ்ட் 3) காலை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்தார். அப்போது அவர், நெய்வேலியில் உள்ள விமான நிலையத்தை UDAN திட்டத்தின் கீழ் விரைவில் மேம்படுத்தி பொதுமக்களுக்கான விமான சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.
Similar News
News September 14, 2025
கடலூர்: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு மாவுகட்டு

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சந்திரகலா (40). முன்விரோதம் காரணமாக இவரது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 8 பேர் மீது நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜதுரையை (20) நேற்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராஜதுரைக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.
News September 14, 2025
கடலூர்: புதிய கமிஷனர் நியமனம்

கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு 128 நாட்கள் ஈட்டிய விடுப்பில் செல்கிறார். இதனால் அவருக்கு பதிலாக கடலூர் மாநகராட்சியின் கமிஷனராக, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் முஜிபுர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளார். இந்நிலையில் முஜிபுர் ரகுமான் விரைவில் கடலூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். SHARE NOW!
News September 14, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.13) இரவு 10 மணி முதல் இன்று (செப்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.