News March 26, 2025
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த மயிலாடுதுறை எம்பி

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று நேரில் சந்தித்து மயிலாடுதுறை தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரையிலான இன்டர்சிட்டி ரயிலை வாரத்தில் எல்லா நாளும் இயக்க வேண்டும், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.