News January 3, 2025
மது போதையில் இருதரப்பினர் மோதல் – 10 பேர் மீது வழக்கு
புதுச்சேரி பெரிய கடை போலீசார் ரோந்து சென்றனர் அப்போது ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் உணவகம் எதிரே இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர் இதில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் மூன்று பேரை பிடித்து சென்றனர் அவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போலீசாருக்கு எதிரான கோஷங்களை சில பெண்கள் எழுப்பினர் இதில் அமுதா ஹரிணி ஜான்சி சத்யா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்
Similar News
News January 8, 2025
புதுவையில் எச்எம்பிவி பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.வி., பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம், சுவாசநோய்த் தொற்றுக்களின் தரவுகளை ஆய்வு சுகாதாரத்துறை செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இருமல் அல்லது தும்மும் போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும் என தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
News January 8, 2025
புதுவையில் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை
புதுச்சேரியில் உள்ள மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ. 64.38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
News January 8, 2025
போஸ்ட் பெய்டு ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டம்
புதுவை அரசு மின்துறை சார்பு செயலர் சிவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்மார்ட் மீட்டரை பிரீபெய்டு முறையில் இல்லாமல் தொடக்கத்தில் போஸ்ட் பெய்டு முறையில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்ப அடிப்படையில் பிரீபெய்டு முறைக்கு மாறுவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.