News April 8, 2025
மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News October 26, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (25.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் <
News October 25, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


