News March 21, 2024
மதுரை: DMK அமைச்சர் மீது பாமக புகார்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருளை அலைபேசியில் அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட பாமக சார்பில் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமைச்சர் வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் பாமகவினர் கூறியுள்ளனர்.
Similar News
News November 27, 2025
மதுரையில் 12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை நகர் உள்பட தென் மாவட்டங்களில் பணியாற்றும் 12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களான கூடல் புதூர் காசிராஜன், திருநகர் விமலா, ஜெய்ஹிந்த்பும் மகேஷ் குமார், தெப்பக்குளம் கீதாலட்சுமி ஆகியோர் நெல்லை, மதுரை, ராமநாதபுரம் சரகங்களுக்கு நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றபட்டுள்ளனர். கன்னியாகுமரி சரவணன் சேரன்மாதேவி மாரீஸ்வரி உள்ளிட்டோர் மதுரைக்கு இடமாற்றபட்டுள்ளனர்.
News November 27, 2025
மதுரையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டி

மதுரை மாவட்டத்தில் பரவை பிரதான சாலையில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி கல்லூரி வளாகத்தில் மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த காவலர் பாலமுருகன் பட்டம் வென்றார். அவருக்கு விருதும், சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.