News March 26, 2025
மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 11, 2025
பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து பயனடையலாம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. 10% பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து கொள்வர்.தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க.உங்களால் ஒருவர் கண்டிப்பாக பயனடைவார்.
News July 11, 2025
இன்று முதல் 2 சூப்பர் பாஸ்ட் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-போடிநாயக்கனூர், மைசூர்-தூத்துக்குடி ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகம் அதிகரித்தல் காரணமாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.10 மணிக்கு மதுரை வரவேண்டிய போடி எக்ஸ்பிரஸ் 6.40 மணிக்கே வந்துவிடும். அதேபோல் 7.35 மணிக்கு வர வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் 7.25 மணிக்கு வந்தடைந்து விடும். எனவே பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படி தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.
News July 10, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.