News April 19, 2025
மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்து

மதுரையில் நடைபெறும் நிகழ்விற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மதுரையைச் சேர்ந்த வைரமுத்து ரசிகர் மன்றத்தினர் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து வைரமுத்துவிற்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினர். மதுரையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்ட பிறகு சென்னைக்கு நாளை புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 25, 2025
மதுரை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

மதுரை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 25, 2025
மதுரை: 25 கிலோ சைக்கிளை பற்களால் துாக்கி சாதனை

சிவரக்கோட்டை முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தகுமார் 45. பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுத்தருகிறார். சிறு வயது முதலே பற்களால் சைக்கிளை துாக்கி நின்றவாறு சாகச முயற்சியில் ஈடுபட்டார்.தற்போது 25 கிலோ எடை கொண்ட சைக்கிளை பற்களால் துாக்கியபடி 100 மீட்டர் துாரம் நடந்து சென்று சாதனை படைத்தார். அடுத்து 200 மீட்டர் துாக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
News November 25, 2025
மதுரை: மீன் பிடிக்க சென்ற முதியவர் பரிதாப பலி

மதுரை சிலையனேரி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாசானம் மகன் முத்து இருள்(60). இவா், அதே பகுதியில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கண்மாய் நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


