News April 26, 2025
மதுரை: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News November 20, 2025
மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மகேஸ்வரன்(34). பெற்றோரை இழந்த இவர் அவருடைய சகோதரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்துள்ளார். கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

உசிலம்பட்டி மற்றும் தும்மக்குண்டு மின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணியால், உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, K.போத்தம்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள் கோவில்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டியில் இன்று (நவ.20) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.