News April 28, 2025
மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News December 3, 2025
மதுரை வெள்ளத்தின் நீங்கா நினைவுகள்..!

1993ம் ஆண்டு மதுரையில் ஒரே நாளில் 520 மி.மீ வரலாறு காணாத மழை கொட்டியது. செல்லூர் கண்மாய் இரவோடு இரவாக முன்னறிவிப்பின்றி உடைக்கப்பட்டு கோரிப்பாளையம், நரிமேடு, பீபீ குளம், தமுக்கம் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. வைகை நதியும் நிரம்பி வழிந்தது. டிச.1 முதல் 4 வரை ( இதே நாளில் ) மதுரை நகரம் ஸ்தம்பித்தது. மக்கள் உடைமைகளை இழந்து தவித்தனர். இன்றும் பலருக்கு இது நீங்கா வடுவாக மனதில் பதிந்துள்ளது.
News December 3, 2025
மதுரை: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

மதுரை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 3, 2025
மதுரை: டீக்கடையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா எனுமிடத்தில் டீக்கடை ஒன்று உள்ளது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, கடையில் அலங்காரத்திற்காக தொங்க விடப்பட்ட சீரியல் விளக்குகளில் இருந்து மின்சாரம் கசிந்துள்ளது. இதை தொட்ட டீ மாஸ்டர் பாலகுரு (50) கீழே விழ, அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் மகன் ரஞ்சித் குமார் (35) என இருவரும் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


