News January 1, 2025
மதுரை மேயரின் உறவினர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் சகோதரர் பொன் விஜய். இவர் தேனி மாவட்டம் கூடலூரில் வசித்து வருகிறார். இவருக்கும் இவர் மனைவி இலக்கியாவுக்கும் குடும்பத் தகராறு இருந்த நிலையில், பொன் விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார் இலக்கியா. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர் இன்று (ஜன.01) அனுமதிக்கப்பட்டார்.
Similar News
News September 18, 2025
மதுரையில் தூய்மை பணி முடக்கம்

மதுரையில் தூய்மை பணி முடக்கம் காரணமாக நகரெங்கும் குப்பைகள் தேங்கியுள்ளன. OURLAND என்ற தனியார் நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை மோதல் நீடிப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குப்பைகள் தொடர்ந்து தேங்குகின்றன. இதனால் மதுரை நகர் முழுவதும் அங்காங்கே குப்பைகளாக காட்சியாளிகிறது.
News September 18, 2025
மதுரை டூ டெல்லி தினசரி சேவை

மதுரையில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் விமானம் இயக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (செப். 17) முதல் தினசரி சேவை வழங்கப்படுகிறது. அதன்படி, தினமும் அதிகாலை 5:15 மணிக்கு டெல்லியில் புறப்படும் விமானம் காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து காலை 8:55 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12:10 மணிக்கு டெல்லி சென்றடையும்.
News September 18, 2025
மதுரையிலே பணி நியமனம் ரூ.25,000 சம்பளம்

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மருந்தக உதவியாளர் பணி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <