News April 15, 2025
மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல். 15) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
மதுரை: வாக்காளர்களே இந்த எண்கள் உங்களுக்குத்தான்.!

மதுரை மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) தொடர்பான உதவி எண்கள் நேற்று (நவ.05) வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பிற விவரங்களுக்கு பொதுமக்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உதவியைப் பெறலாம். பொதுமக்களின் வசதிக்காக தனிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 5, 2025
பள்ளி மாணவி சுருண்டு விழுந்து பலி

மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் ஆஷிகா(14). இவர்
செக்கானூரணி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 5, 2025
மதுரையில் நாளை மின்தடை அறிவிப்பு

மதுரை பைக்காரா, பசுமலை பகுதியில் நாளை (நவ.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பழங்காநத்தம், அக்ரஹாரம், பசும்பொன் நகர், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெரு வரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வைநகர், தேவி நகர், கிருஷ்ணாநகர், காயத்ரிதெரு, துரைசாமிநகர், கோவலன்நகர், அழகப்பன்நகர், திருவள்ளுவர்நகர், பிபிகே ரோடு, முத்துப்பட்டி, பைக்காரா, பசுமலை பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


