News January 22, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று(22.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News December 1, 2025
மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஜனார்த்தனன் 59 முன்னாள் ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் பணியாற்றியபோது சித்த மருத்துவத் துறையில் வேலை பார்த்து கிளினிக் நடத்த சான்றிதழ் பெற்றார். இச்சான்றிதழை வைத்து சொக்கலிங்கபுரத்தில் கிளினிக் நடத்தினர், நேற்று முன்தினம் கிளினிக்கில் இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 1, 2025
மதுரையில் மூன்று மாத பெண் குழந்தை பலி

மதுரை செல்லூர் கார்த்திக் கலைச்செல்வி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதலே தாய்ப்பால் இல்லாததால் டாக்டர்களின் ஆலோசனையின் படி குழந்தைக்கு பால் பவுடர் பால் கொடுத்து தூங்க வைத்தனர், பின் குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


