News August 8, 2024
மதுரை மாவட்டத்திற்கு மழை

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
மதுரை: நவ.15 காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு

மதுரை மேலூர் மேலாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது: 2025-26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. நவ.15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ.6,000 வழங்கப்படும். பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
மதுரை வாலிபர் கல்லால் அடித்து கொலை

மதுரை மாவட்டம், மேலூர் செக்கடி பகுதியில் நொண்டிகோவில்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளியான மணிமாறன் (27) என்பவர் கல்லால் அடித்துக் கொலை செய்யபட்டார். அதிகாலைப் பொழுதில் சிலருடன் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்கள் வெறிச்செயல். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News November 10, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

மதுரை கோசாகுளத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவி அலைபேசியை அதிகம் பார்த்துக் கொண்டிருந்ததாக சொல்லபடுகிறது. இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.


