News January 24, 2025
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (24.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE செய்யவும்.
Similar News
News December 14, 2025
கோரிப்பாளையம் மேம்பாலம் பணிக்காக பிரபல சிலை அகற்றம்

மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் தமிழக நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.190 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பால பணிக்காக தமுக்கம் சந்திப்பில் இருந்த தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அகற்றப்பட்டுள்ளது. அந்த சிலை, வடக்கு வட்டாட்சியரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0452-2531395) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News December 14, 2025
உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் தொழிலாளி பலி

மதுரை உசிலம்பட்டி கொங்கபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 21. ஓட்டல் தொழிலாளியான இவர் பணி முடிந்து நேற்றிரவு 7:20 மணியளவில் வீடு திரும்ப ரோட்டை கடக்கும் முயன்ற போது மதுரையில் இருந்து கம்பம் சென்ற, அரசு பஸ் மோதி அவர் பலியானார். இது குறித்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


