News December 5, 2024

மதுரை மாநகராட்சிக்கு புதிய துணை கமிஷனர் நியமனம்

image

மதுரை மாநகராட்சி துணை கமிஷனர்கள் தயாநிதி ஓய்வு பெற்றார், சரவணன் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சிக்கு துணை கமிஷனர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால் மாநகராட்சி கமிஷனருக்கு பணிச்சுமை அதிகரித்தது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் இருந்த கே. சிவக்குமார் மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிருநாளில் பொறுப்பேற்க உள்ளார்.

Similar News

News September 16, 2025

மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் விபத்தில் பலி

image

மதுரை, ஆண்டாள்புரம் அக்ரினி நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 41. மதுரை காமராஜ் பல்கலை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை தலைவரான இவர் மதுரையை சேர்ந்த செல்லவேலுடன் 33, காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றுவிட்டு மதுரை வந்து கொண்டிருந்தனர். கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே வந்த போது, கேரள அரசு பஸ், கார் மீது மோதியது. இதில் பிரவீன் குமார் உயிரிழந்தார். செல்லவேல் காயமடைந்தார்.

News September 16, 2025

மதுரை: வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதா! டயல் செய்யுங்க

image

மதுரை மழை காலங்களில் பாம்புகள் நகர்கின்றன, மக்கள் பாம்புகளை கண்டவுடன் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சமடைந்து அவற்றை அடித்து கொல்வதும் நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட வனத்துறை பிரத்தியோக அலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளனர் மாநகர் 86185 67631 புறநகர் 97869 44624 என்ற எண்களில் தெரிவித்தால் வனத்துறை அலுவலர்கள் நேரில் வந்து பாம்புகளை பிடிப்பார்கள். அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக உதவும்.

News September 15, 2025

ஆட்சியர் மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார்

image

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார், மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் தேனூர் ஊராட்சி கட்டப்புளி கிராமத்தில்  கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 194 புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் அன்பு இல்லங்கள் வளாகத்தில், உலகப் பொறியாளர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய கட்டுனர் சங்கம் (மதுரை கிளை) சார்பில் மரக்கன்று நடும் பணியினை இன்று துவக்கி வைத்தார்.

error: Content is protected !!