News April 2, 2025
மதுரை: மணிமேகலை விருது வேண்டுமா?

மதுரையில் மாநில, மாவட்ட அளவிலான சிறந்த சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், நகர்ப்புற, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை தேர்வு செய்து மணிமேகலை விருது வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மணிமேகலை விருதுக்கு தகுதியான சுயஉதவி குழுக்கள், சமுதாய அமைப்புகள் ஏப்ரல் 25க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 6, 2025
மதுரை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா..!

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக், கார், லாரி உள்ளிட்ட 72 வாகனங்களில், 48 வாகனங்கள் 22.12.2025 ஆம் தேதி மதுரையில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 9585511010 எண்ணில் அழைக்கவும். கம்மி விலையில் வாகனங்கள் கிடைக்கும். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
மதுரை இளைஞர் ஏடிஎம்மில் நூதன திருட்டு

திருப்புவனத்தை சேர்ந்த மஞ்சுளா (53) மாட்டுத்தாவணியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற போது அவருக்கு உதவி செய்வது போல் வாலிபர் ஒருவர் நடித்துள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரின் செல்போனில் ரூ 28,500 பணம் எடுத்ததாக மெசேஜ் வந்தது. மாட்டுத்தாவணி போலீசார் சிசிடிவி பதிவை ஆய்வு செய்து வில்லாபுரம் சபரி கிருஷ்ணனை(33) நேற்று கைது செய்து ரூ.8000த்தை பறிமுதல் செய்தனர்.
News December 5, 2025
மதுரை மாநகராட்சி ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி.!

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பிளம்பராக இருந்தவர் ராஜா 50. மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதி கழிவு நீர் கால்வாய் அருகே அவர் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


