News April 20, 2025

மதுரை மக்களே எச்சரிக்கை

image

மதுரையில் நாளை ஏப்.21 முதல் ஏப்.26ஆம் தேதி வரை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குளிர்ச்சியான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

JUST IN: மதுரையில் பள்ளிகளுக்கு விடுமுறையா.? விளக்கம்

image

தமிழகத்தில் நாளை (நவ.29) சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்றும், தற்போது பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

BREAKING மதுரையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.29) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, மாணவர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 28, 2025

மதுரை: சு.வெங்கடேசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு

image

மதுரையில், சு.வெங்கடேசன் எம்பி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங் மற்றும் இயக்குநர் பி.என்.புஷன் ஆகியோர் ஹாக்கி அணிகளுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர். FIH ஹாக்கி மேன்ஸ் ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் கனடா மற்றும் ஐர்லாந்து அணிகள் மைதானத்தில் இறங்கிய போது, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

error: Content is protected !!