News September 15, 2024

மதுரை: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

image

கள்ளிக்குடி தாலுகாவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி 31, சில நாட்களுக்கு முன் இரவு குடிபோதையில் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகள் சத்தம் போட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் எழுந்து சிறுமியைக் காப்பாற்றினர். இது குறித்து ஊர் நல அலுவலர் கவுசல்யா புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் தொழிலாளியைக் கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

JUST IN: திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதி.!

image

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளில் (டிச.3) தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் எழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். மலை உச்சியில் ஆய்வு செய்த நீதிபதி ஜி.ஆர்,சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News December 1, 2025

மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 1, 2025

மதுரையில் பரவும் டெங்கு… மக்களே உஷார்

image

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சிந்தாமணி பகுதியில் இரண்டு வயது பெண் குழந்தை உட்பட கிராமப்புறங்களிலிருந்து ஒரு பெண், இரு ஆண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் பிரத்யேக காய்ச்சல் வார்டு தயாராக உள்ளது.

error: Content is protected !!