News February 16, 2025
மதுரை: “நூல் அரும்புகள்” – குழந்தைகள் புத்தக விமர்சனம்

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில்(16.02.2025 ) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய கலைஞர் நூற்றாண்டு நூலகம் குழந்தைகளுக்கு அழைப்பு.
Similar News
News October 28, 2025
மதுரை பெற்றோர்களே மறந்துராதீங்க.!

மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. நேற்று துவங்கிய இத்திட்டம் அக்.31 வரை 4 நாட்களுக்கு நடக்கிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள 5 வயதுக்குட்பட்ட சுமார் 1,19,447 குழந்தைகள் இதன் மூலம் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 28, 2025
மதுரை – துபாய் விமானத்தில் நடுவானில் கோளாறு

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மதியம் புறப்பட்ட சில நேரத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 173 பயணிகள் இருந்த அந்த விமானம் ஆய்வுக்குப் பிறகு சுமார் 8 மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டது.
News October 28, 2025
மதுரை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


