News March 6, 2025
மதுரை : தொலைதூர கல்வி சேர்க்கை தொடக்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்விக்கான பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பட்டய படிப்பு போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை 31.03.2025 உடன் முடிவடைகிறது. இந்த சேர்க்கையானது இரண்டு பருவங்களில் நடைபெறும். 2025 இல் காலண்டர் வருடத்திற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேரடியாக கல்வி நிலையங்களில் சென்று பயில இல்லாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
Similar News
News April 21, 2025
மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மதுரையில் ஏப்.29 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து , மே.8 திருக்கல்யாணம், மே.9 தேரோட்டம், மே.10 கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே.12 இல் நடைபெற உள்ளதால் அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.உங்க ஊர் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 21, 2025
இளைஞர் கதையை முடித்த மாஜி ஏட்டு

மதுரை, ஆனையூர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், திருச்சியில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகே குடியிருந்தவர் அழகுபாண்டி, கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.நேற்று, போதையிலிருந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நடராஜன், வீட்டிற்குள் புகுந்து, அழகுபாண்டியை அரிவாளால் வெட்டினார். அந்த இடத்திலேயே அவர் பலியானார்.
News April 20, 2025
மதுரையில் 613 உணவகங்களுக்கு நோட்டீஸ்

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 613 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக RTI-ல் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 51 உணவகங்கள் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ததாக நீதிமன்றம் மூலம் சுமார் 108 உணவக உரிமையாளர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.