News March 5, 2025
மதுரை : தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவை மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 6,7 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதேபோல எழும்பூர் – புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது .
Similar News
News November 25, 2025
மதுரை: கிரிக்கெட் விளையாடிய இளைஞர் திடீர் இறப்பு

மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன், 26. குளிர்பான நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேன். நேற்று முன்தினம் அதிகாலையிலேயே ரிங் ரோடு மண்டேலா நகர் அருகே கிரிக்கெட் விளையாட சென்றார். காலை 11:30 மணிக்கு அவரது தாய் போனில் பேசியுள்ளார். பகல் 2:00 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணுவர்தன், சோர்வாகி தண்ணீர் கேட்ட நிலையில் மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
மதுரை: 100% SIR நிறைவு – அலுவலர்களுக்கு பாராட்டு

இன்று (24.11.2025) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இ.ஆ.ப., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை 100% நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
News November 24, 2025
மதுரை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


