News March 19, 2024
மதுரை: சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை கள்ளழகர் கோவில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
மதுரையில் மூன்று மாத பெண் குழந்தை பலி

மதுரை செல்லூர் கார்த்திக் கலைச்செல்வி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதலே தாய்ப்பால் இல்லாததால் டாக்டர்களின் ஆலோசனையின் படி குழந்தைக்கு பால் பவுடர் பால் கொடுத்து தூங்க வைத்தனர், பின் குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 1, 2025
மதுரை: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி! உடனே APPLY

மதுரை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
மதுரை: கடன் தொல்லையால் முதியவர் விஷமருந்தி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த ஜனார்த்தனன்(59) பல்வேறு இடங்களில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் இருந்து வந்தார் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை படுத்தவே மன உளைச்சல் அடைந்த அவர் விஷம் குடித்தார். கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று அங்கு உயிரிழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


