News April 24, 2025
மதுரை : கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 469 ரூபாய் ரூபாய் பணமும், 50 கிராம் தங்கமும், 74 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தகவல்.
Similar News
News September 16, 2025
மதுரையில் கம்மியான விலையில் பைக்,கார் வேண்டுமா..!

மதுரை மாநகர காவல்துறையில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் செப்.22 காலை11மணிக்கு ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் வாகனங்களை பார்வையிட்டு, டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரத்தை செப்.19க்குள் நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பைக், கார் வாங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 16, 2025
மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் விபத்தில் பலி

மதுரை, ஆண்டாள்புரம் அக்ரினி நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 41. மதுரை காமராஜ் பல்கலை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை தலைவரான இவர் மதுரையை சேர்ந்த செல்லவேலுடன் 33, காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றுவிட்டு மதுரை வந்து கொண்டிருந்தனர். கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே வந்த போது, கேரள அரசு பஸ், கார் மீது மோதியது. இதில் பிரவீன் குமார் உயிரிழந்தார். செல்லவேல் காயமடைந்தார்.
News September 16, 2025
மதுரை: வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதா! டயல் செய்யுங்க

மதுரை மழை காலங்களில் பாம்புகள் நகர்கின்றன, மக்கள் பாம்புகளை கண்டவுடன் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சமடைந்து அவற்றை அடித்து கொல்வதும் நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட வனத்துறை பிரத்தியோக அலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளனர் மாநகர் 86185 67631 புறநகர் 97869 44624 என்ற எண்களில் தெரிவித்தால் வனத்துறை அலுவலர்கள் நேரில் வந்து பாம்புகளை பிடிப்பார்கள். அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக உதவும்.