News May 10, 2024
மதுரை: கூலித் தொழிலாளியின் மகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மதுரை உசிலம்பட்டி அருகே வசிக்கும் கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார்.
Similar News
News December 10, 2025
மதுரை: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

மதுரை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 10, 2025
மதுரையில் 65 பேர் கைது

மதுரையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்குவது போல அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார், வேளாங்கண்ணி முன்னிலையில் வகித்தார், மாநிலத் தலைவரும் மேகனா பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 65 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 10, 2025
மதுரையில் நாளை (டிச.11) மின்தடை அறிவிப்பு

மதுரையில் நாளை (டிச.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர்காலனி, கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்திநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வாரிய காலனி, சண்முகா நகர், மீனாட்சி நகர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


