News March 27, 2025
மதுரை: குறைந்த செலவில் நீச்சல் பயிற்சி

மதுரை மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கு ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை குறைந்த செலவில் நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாதாந்திர பயிற்சிக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்படும். www.sdat.in.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்வது அவசியம். வல்லுநர்கள் மூலம் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது.
Similar News
News December 4, 2025
BREAKING மதுரை ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவு.!

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் 5:30 மணிக்குள் ஆஜராகவிலையென்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துளளார். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை உடனடியாக ஆஜராக கூறியுள்ளார். 5 நிமிடத்தில் எப்படி ஆஜராக முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News December 4, 2025
BREAKING: மதுரை காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு.!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் பத்து நிமிடத்தில் காணொளி மூலம் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும், பாதுகாப்பு வழங்காதது ஏன் என விளக்கம் தர உத்தரவிடபட்டுள்ளது.
News December 4, 2025
JUST IN திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கு விசாரணை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில், உயர் நீதிமன்ற அமர்வில் அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கை விசாரித்து வருகிறார். தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை என்றும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


