News December 6, 2024

மதுரை – கான்பூர் ரயில் தாமதம்

image

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இணை ரயில் தாமதமாக வருவதால் மதுரையில் இருந்து இன்று (டிச.6) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – கான்பூர் சென்ட்ரல் பண்டிகை கால சிறப்பு ரயில் (01928) சனிக்கிழமை (டிச.7) மதியம் 02.00 மணிக்கு 14 மணி 25 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஏற்ப பயணிகள் பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

மதுரை: கலெக்டர் ஆபிசில் SIR தொடர்பான ஆலோசனை கூட்டம்

image

சிறப்பு தீவிர திருத்த (SIR 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹ்ரா, (இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி) தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் முன்னிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (SIR) பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

News December 13, 2025

மதுரையில் சித்த மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை ஆட்சியா் பிரவீன் குமார் வெளியிட்ட செய்தியில், மாவட்ட நலச் சங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் குழுமத்தில் காலியாக உள்ள சித்த மருத்துவா் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள், மாவட்ட நிா்வாக செயலா், மாவட்ட சுகாதார அலுவலா், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண் 0452 – 2640778) என்ற முகவரிக்கு வருகிற 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

News December 13, 2025

மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in <<>>என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!