News August 14, 2024
மதுரை எய்ம்ஸ் வெளியானது புதிய தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறுவதாக எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும், கட்டுமான பணியில் எந்தவித சுணக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய சுகாதாரத்துறை தேவையான நிதியை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
மதுரை அருகே பெண் தற்கொலையில் சந்தேகம்…!

வெள்ளலூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னக்கிளி(35). முத்துக்குமார் துபாயில் வேலை பார்த்து வருவதால் தனது மகள் முத்துலட்சுமி(10), சிவா(7) மற்றும் மாமியாருடன் அன்னக்கிளி வாசித்து வந்தார். அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார், உயிரிழப்புகான காரணம் குறித்து இன்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
JUSTIN திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் விசாரணையை வரும் 10-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில் வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு 12-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் வெள்ளிக்கிழமைக்கு பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என்று இருநீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
News December 5, 2025
நாடளுமன்றத்தில் எதிரொளிக்கும் திருப்பரங்குன்றம் விவகாரம்

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.


