News August 2, 2024
மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.157 கோடி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் குறித்து எம்.பி சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் சுகாதார துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கு ரூ.157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி அக்டோபர் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
மதுரையில் நூதன முறையில் ரூ.15 லட்சம் மோசடி

செல்லூரை சேர்ந்த உதயகுமாரிடம்(34) அப்துல் ரஷீத், ஜாபர் ஷெரீப் ஆகியோர் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி உள்ளனர். இதற்காக மொத்தம் ரூ.15 லட்சம் பல்வேறு கட்டங்களில் பெற்றுள்ளனர். பின் அவர்கள் வேலைக்கான உத்தரவை கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த வேலை உத்தரவு போலியானது என தெரிந்தது. செல்லூர் போலீசார் இருவர் மீதும் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 19, 2025
சிக்கந்தர் பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா நிபந்தனைகள்

தி.குன்றம் உஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, டிச.21ம் தேதி நடைபெறும் கொடியேற்றம் & சந்தனக்கூடு நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி நடத்த முடிவு. வழக்கமான ஊர்வல பாதைகளில் மட்டும் ஊர்வலம் நடைபெற வேண்டும். பட்டாசு பயன்படுத்தக் கூடாது. விதிமீறலால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தர்ஹா நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என நிபந்தனை.
News December 19, 2025
மதுரை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <


